பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

2வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3!

சந்திரயான்-3 விண்கலத்தை 2வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2023, 10:56 am

DIN

சந்திரயான்-3 விண்கலத்தை 2வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் குறைந்தபட்சம் 226 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 41,603 கி.மீ. தொலைவும் கொண்ட புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2வது புவிவட்ட சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் ஆக. 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.