உம்மன் சாண்டி மறைவு: கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி
கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி
Updated on
1 min read

பெங்களூரு: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொண்டை புற்றுநோய்க்கு  சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில்  இன்று காலமானார்.

இவரது உடல் கர்நாடக அமைச்சர் ஜான் வீட்டில் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உம்மன் சாண்டியில் உடலுக்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து உம்மன் சாண்டியின் சொந்த ஊரான கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு கொண்டு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com