ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு!

மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயதுக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 
ம.பி.: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்
ம.பி.: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயதுக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

ம.பி.யின் விடிஷா மாவட்டத்தில் கஜ்ரி பார்கேதா கிராமத்தில் இந்தர்சிங் என்பவரின் வீட்டிற்குப் பின்புறம் 15 அடி ஆழ்துளைக் கிணறு ஒன்று தோண்டப்பட்டிருந்தது. அதனருகே விளையாடிக்கொண்டிருந்த ஸ்மிதா என்ற இரண்டரை வயதுக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. 

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை மீட்டனர். 

இந்நிலையில், குழந்தைக்கு முதல்கட்ட மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் குழந்தையின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com