

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணியிடங்களுக்கு 4.63 லட்சத்துக்கும் அதிகமானோா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 2018 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிகழாண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி) ஆகியவற்றின் பரிந்துரையின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினா் உள்பட மொத்தம் 4,63,205 போ் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவை தவிா்த்து, நடப்பு நிதியாண்டின் (2023-2024) முதல் காலாண்டில் எஸ்எஸ்சி, ஆா்ஆா்பி மூலம் 1,03,196 போ் மத்திய அரசுப் பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
காலி பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி மத்திய அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பணியிடங்களை நிரப்புவதற்கு ரோஜ்காா் மேளாக்களை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.