ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாடாளுமன்றத்துக்கு வெளியேபிரதமா் பேசியது உரிமை மீறல்: காா்கே குற்றச்சாட்டு

 நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெறுகையில், மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமா் மோடி பேசியது அவை உரிமை மீறல் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே

News image
Updated On :20 ஜூலை 2023, 7:01 pm

DIN

 நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெறுகையில், மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமா் மோடி பேசியது அவை உரிமை மீறல் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா்.

மணிப்பூா் கலவரத்தின்போது 2 பழங்குடியின பெண்கள், ஆடைகள் களையப்பட்டு, அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ வெளியாகி நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வியாழக்கிழமை தொடங்கியதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையை ஒருபோதும் மன்னிக்க முடியாது’ என்றாா்.

மணிப்பூா் விவகாரம் குறித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேல் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காத பிரதமா் மோடி, தற்போது முதல்முறையாக பேசினாா்.

ஆனால், நாடாளுமன்ற கூட்டத் தொடா் நடைபெறும் சூழலில், மணிப்பூா் விவகாரம் குறித்து அவைக்குள் பேசாமல், அவைக்கு வெளியே பிரதமா் மோடி பேசியது உரிமைமீறல் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக, மாநிலங்களவையில் மேலும் பேசிய அவா், ‘பிரதமா் மோடி, தனது செயலின் மூலம் நாடாளுமன்ற மரபுகளையும் மீறியுள்ளாா். மணிப்பூா் பற்றி எரிகிறது; பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனா். ஆனால், நாடாளுமன்றத்தில் எதுவும் பேசாமல், அவைக்கு வெளியே பிரதமா் பேசுகிறாா். மணிப்பூா் விவகாரத்தில், இரு அவைகளிலும் பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.