மணிப்பூர் செல்வதை தவிர்த்து தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர்: அசோக் கெலாட்

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு செல்வதை தவிர்த்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: முதல் முறையாக பிரதமர் ஒருவர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு செல்லாமல் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு செல்வதைப் பார்க்கிறேன். மணிப்பூரில் பாஜக ஆட்சியில் உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தற்போது இருந்திருந்தால் பிரதமர் என்ன கூறியிருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை தொடர்பாக பேசும்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடப்பதாகக் குறிப்பிடுகிறார். இது ராஜஸ்தான் மாநில மக்களுக்கு காயத்தை ஏற்படுத்துகிறது. ராஜஸ்தானின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசும் முன்பு பிரதமர் மணிப்பூர் வன்முறை குறித்து முடிவெடுக்க கூட்டம் கூட்டியிருக்க வேண்டும். என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com