மகாராஷ்டிரத்தில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
மகாராஷ்டிரத்தின் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.


மகாராஷ்டிரத்தின் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், தலைநகர் மும்பை, தாணே, ராய்காட் ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என கணித்துள்ளது.
கடந்த வாரம் வெளுத்துவாங்கிய கனமழை, ஞாயிறு முதல் மழையின தீவிரம் சற்று குறைந்தது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று காலை முதல் பல இடங்களில் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது.
மும்பை, ராய்காட், தாணே ஆகிய மூன்று மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பால்கர் மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...