மணிப்பூர் தொடர்பாக பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும்: நிதிஷ் குமார்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 
மணிப்பூர் தொடர்பாக பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும்: நிதிஷ் குமார்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகு நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்தச் சூழலில், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு பழங்குடியினப் பெண்கள், மற்றொரு தரப்பு ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ல் தொடங்கியது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியதும் மணிப்பூர் விடியோ தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் ஐந்தாவது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்க்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றினர். சபாநாயகர் இந்த தீர்மானத்தை ஏற்றுள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியது, 

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் குறித்து நிதீஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூரில் நடக்கும் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? மணிப்பூர் வன்முறை மற்றும் விடியோ தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com