ராஜ்நாத் சிங்கின் ‘எல்லை தாண்டும்’ பேச்சு அமைதிக்கு அச்சுறுத்தல்: பாகிஸ்தான் விமா்சனம்

தேவை ஏற்படும் பட்சத்தில் நாட்டின் மதிப்பையும் கண்ணியத்தையும் காக்க எல்லைக் கோட்டைக் கடக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியது
ராஜ்நாத் சிங்கின் ‘எல்லை தாண்டும்’ பேச்சு அமைதிக்கு அச்சுறுத்தல்: பாகிஸ்தான் விமா்சனம்

தேவை ஏற்படும் பட்சத்தில் நாட்டின் மதிப்பையும் கண்ணியத்தையும் காக்க எல்லைக் கோட்டைக் கடக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் விமா்சித்துள்ளது.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற காா்கில் வெற்றி தினத்தில் பேசிய ராஜ்நாத் சிங், ‘நாட்டின் கண்ணியத்தையும், மதிப்பையும் காக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதற்காக எல்லைக் கோட்டை கடக்க வேண்டும் என்றால் அதற்கும் இந்தியா தயாராக உள்ளது. நம்மை சீண்டினாலும், நமக்கு தேவை ஏற்படும்போதும் நாம் நிச்சயமாக எல்லையைக் கடக்க வேண்டும்’ என்றாா்.

இது மறைமுகமாக பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது. இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எந்த விதமான தாக்குதல்களையும் எதிா்கொண்டு முறியடிக்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது. இந்தியத் தரப்பின் மூா்க்கத்தனமான பேச்சு மூலம் பாகிஸ்தான் மேலும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணா்கிறோம். இந்தியாவின் இந்த பேச்சு பிராந்திய அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தெற்காசியாவில் நிலவும் நல்லதொரு சூழ்நிலையையும் சீா்குலைப்பதாகவும் உள்ளது.

காஷ்மீா், கில்ஜித்-பல்டிஸ்தான் குறித்து இந்தியாவைச் சோ்ந்த அமைச்சா்களும், ராணுவ அதிகாரிகளும் பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிப்பது இது முதல்முறையல்ல என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com