தனியாருக்குத் திறந்துவிடப்படுகின்றன லித்தியம், அணு கனிம சுரங்கங்கள்!

லித்தியம் உள்ளிட்ட கனிமங்களை தனியார் துறை எடுக்க அனுமதிக்கும் 'சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2023' மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 
தனியாருக்குத் திறந்துவிடப்படுகின்றன லித்தியம், அணு கனிம சுரங்கங்கள்!

லித்தியம் உள்ளிட்ட கனிமங்களை தனியார் துறை எடுக்க அனுமதிக்கும் 'சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2023' மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த சட்டத்தின் மூலமாக, மின்சார வாகனங்களில் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான லித்தியம் மற்றும் மேலும் 5 அணு கனிமங்கள், தடை செய்யப்பட்ட கனிமங்கள் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது. 

தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி 12 கனிமங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமே எடுக்க முடியும். 

ஆனால் இந்த சட்டத்திருத்தத்தின் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற கனிமங்களை ஆய்வு செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  மேலும் லித்தியம், பெரிலியம், நியோபியம், டைட்டானியம், டான்டலம், சிர்கோனியம் ஆகிய 6 தனிமங்களை தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்க முடியும். 

'விண்வெளி துறை, மின்னணு, தகவல் தொடர்பு, எரிசக்தி துறை, மின் பேட்டரிகள் ஆகியவற்றில் இந்த தனிமங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. புதிய மசோதாவின் படி, மேற்குறிப்பிட்ட 6 கனிமங்களின் ஆய்வு மற்றும் சுரங்கம் தனியார் துறைக்கு விடப்படும். இதனால் நாட்டில் கனிமங்களின் ஆய்வு மற்றும் சுரங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்' என்று மத்திய அரசுத் தரப்பில் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த மசோதாவில் உள்ள திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைக்கும் என்று கூறியதுடன், கடற்கரை மணல் தாதுக்களான இல்மனைட், ரூட்டைல், லியூகோக்சின், கார்னெட், மோனாசைட், சிர்கான் மற்றும் சில்லிமனைட் போன்ற கனிமங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் என்றார். 

கனிமங்களை தனியார் துறைக்கு திறந்துவிடுவதன் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரன் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

மணிப்பூர் விவகாரத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com