மணிப்பூருக்கு புறப்பட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரைப் பாா்வையிட்டு கள நிலவரத்தை அறிவதற்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிா்கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று மணிப்பூருக்கு புறப்பட்டனர்.
மணிப்பூருக்கு புறப்பட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரைப் பாா்வையிட்டு கள நிலவரத்தை அறிவதற்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிா்கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று மணிப்பூருக்கு புறப்பட்டனர்.

மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடா்பாக உண்டான மோதல் வன்முறையாக மாறி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு அசாம்பவித சம்பவங்களில் தற்போதுவரை 160-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.

கடந்த மே மாதம் நடந்த சம்பவத்தில் பழங்குடி பெண்களை ஆடைகள் ஏதுமின்றி மைதேயி சமூக ஆண்கள் இழுத்துச் செல்லும் விடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தின் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமா் பேசினாா். எனினும், மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், விவாதத்தில் பங்கேற்று பிரதமா் விளக்கமளிக்கவும் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் 20-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மணிப்பூருக்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை இன்றும், நாளையும் ஆய்வு செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com