மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றஞ்சாட்டியுள்ளார். 
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் மொஹாலியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதித்திருந்தால், இந்த விவகாரத்தில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை நாடு அறிந்திருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதத்தை விரும்பவில்லை. நாங்கள் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்தோம். மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கிறார். 

இதற்கு முன்பு மணிப்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியவரும் என்றார். மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூகத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. 

அதிலும் பழங்குடி பெண்களை ஆடைகள் ஏதுமின்றி மைதேயி சமூக ஆண்கள் பொதுவெளியில் இழுத்துச் செல்லும் விடியோ(கடந்த மே மாதம் நடைபெற்றது)  சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், விவாதத்தில் பங்கேற்று பிரதமா் விளக்கமளிக்கவும் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையேதான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 20-க்கும் மேற்பட்டோர் மணிப்பூர் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக சார்பில் எம்.பி. கனிமொழி சென்றுள்ளார். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com