ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: மம்தா பானர்ஜி

ரயில் விபத்தில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று  மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜூன் 2023, 9:10 am

DIN

ரயில் விபத்தில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று  மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  நேரில் சென்று பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்து உள்ளேன். இந்த ரயில் விபத்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்தாகும். எனக்கு தெரிந்த வரையில் ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி எதுவும் இல்லை, அந்தக் கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. 

உயிரிழந்தவர்களை மீண்டும் பிழைக்க வைக்க முடியாது. மீட்பு நடவடிக்கையின் மூலம் இயல்பு நிலையை கொண்டு வர முடியும் என்று  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.