ஒடிசா ரயில் விபத்து... ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: ராகுல்காந்தி

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்திள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி


புதுதில்லி: ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்திள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகியும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, யாரிடமும் உரிய பதில் இல்லை. இத்தகைய மோசமான விபத்திற்கு பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது.

ரயில்வே அமைச்சர் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் பிரதமர் உடனடியாக ரயில்வே அமைச்சரை பதவி விலகச்சொல்ல வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com