
தேசிய தலைநகரில் பள்ளியைத் திறந்துவைத்த முதல்வர் கேஜரிவால் முன்னாள் அமைச்சர் மனீஷ் சிசோடியாவை நினைத்துக் கண்கலங்கினார்.
தில்லியில் பவானா பகுதியில் தர்யாபூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் புதிய கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தில்லி முதல்வரும், ஆத் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளியைத் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தில்லி முன்னாள் கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா இந்த துறைக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், அவரையும் மீறிக் கண்கலங்கினார்.
கடந்த பிப்ரவரியில் மதுபானக் கொள்கையில் முறைகேடு செய்ததாக சிபிஐ அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். தில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.