மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமியை ரோபோ உதவியுடன் மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
கடந்த ஜூன் 6-ம் தேதி ம.பி.யின் முங்காவல்லி கிராமத்தில் பண்ணை நிலத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுமி சிருஷ்டி குஷ்வாஹா, 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுமிக்கு ஆக்சிஜன் வாயு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பெரிய குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் பணி 3-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சிறுமியை மீட்க ராணுவம் அழைக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று ரோபோட் உதவியுடன் குழந்தையை மீட்க நிபுணர் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.