சஞ்சய் ரௌத் கொலை மிரட்டல் விவகாரம்: மேலும் ஒருவரை கைது செய்த மும்பை காவல் துறை!

சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் அவரது சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இதன்மூலம், இந்த விவகாரத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: இந்த கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புள்ள மற்றொருவர் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபருக்கு அரசியல் சார்ந்த உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பு உள்ளது. அவரது சமூக ஊடக பக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ரௌத்தின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களும் இடம் பெற்றுள்ளன. அவர் வருகிற ஜூன் 19 வரை காவலில் வைக்கப்படவுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது நபராக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தொலைபேசி கொலை மிரட்டலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com