எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கியூபாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டு நாள் பயணமாக இன்று கியூபாவுக்கு வருகை தந்துள்ளார். 

News image
பினராயி விஜயன்
Updated On :15 ஜூன் 2023, 12:11 pm

DIN

கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டு நாள் பயணமாக இன்று கியூபாவுக்கு வருகை தந்துள்ளார். 

முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்காவின் நியூயார்க்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலையில், இன்று ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். 

கேரள முதல்வர் மற்றும் அவரது குழுவினரை ஹவானாவின் துணை ஆளுநர், கியூபாவுக்கான இந்தியத் தூதர் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். 

இரண்டு நாளும் ஹவானாவில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். 

மேலும், பல்வேறு முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் போது ஜோஸ் மார்டி தேசிய நினைவுச்சின்னம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர் பார்வையிடுகிறார். 

முதல்வருடன் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், திட்டமிடல் வாரிய துணைத் தலைவர் வி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.