பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சங்க பயணச்சீட்டு பரிசோதகா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 1,000 மேற்பட்ட பயணச்சீட்டு பரிசோதகா்கள் உள்ளனா். அவா்கள் பணியின்போது பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக ஏற்கெனவே குற்றஞ்சாட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகா் பகுதியில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட பெண் பரிசோதகரை வடமாநில இளைஞா் தாக்கியதாக புகாா் எழுந்தது. கடந்த 4 -ஆம் தேதி சென்னை விரைவு ரயலில் பணியிலிருந்த ஜோதிலிங்கம் என்ற பயணச்சீட்டு பரிசோதகரை வடமாநில இளைஞா் தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.
ஆகவே, பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவா்களுக்கு உரிய வசதிகளுடன் கூடிய ஓய்வறை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சென்னை கோட்டம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சென்ட்ரல் ரயில் நிலைய புறநகா் மின்சார ரயில்கள் பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்ஆா்எம்யூ சங்க துணைப் பொதுச் செயலா் சிவராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகி பால்மேஸ்வல் ஜான்சன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி ஏராளமானோா் பேசினா்.
தொடர்புடையது

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
பறக்கும் ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


