மணிப்பூர் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என பிரதமர் நரேந்திர மோடிக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 120 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் என். பிரேன் சிங் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், மணிப்பூர் மக்கள் அரசுமீது முழுவதுமாக நம்பிக்கை இழந்துவிட்டதாக மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதில் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர். ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ.
பிரதமருக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய அரசு மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளனர். தற்போதைய சூழலில் அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது துளியும் மக்களுக்கு நம்பிக்கையில்லை.
இதனால், குகி மற்றும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கலாம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


