பாட்னாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னா சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பாட்னாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிகார் மாநிலம் பாட்னா சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. =

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பிகார் முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பிகார் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளிடமிருந்தும்   சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசியாவின் ஒளி புத்தர், கர்பூரி தாக்கூர் மற்றும் பி.பி. மண்டல் போன்றோரை வழங்கிய மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com