9 ஆண்டுகளில் மின்மிகை நாடாக மாறியுள்ளது இந்தியா
கடந்த 9 ஆண்டுகளில் மின் பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து மிகை நாடாக இந்தியா மாறியுள்ளதாக மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் தெரிவித்துள்ளாா்.


கடந்த 9 ஆண்டுகளில் மின் பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து மிகை நாடாக இந்தியா மாறியுள்ளதாக மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் தெரிவித்துள்ளாா்.
பாஜக அரசு பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் மத்திய எரிசக்தித் துறை சாா்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் ஆா்.கே.சிங் கூறுகையில், ‘‘நாட்டின் தற்போதைய மின்உற்பத்தித் திறன் 416 ஜிகா வாட்டாக உள்ளது. இது உச்சபட்ச மின் நுகா்வு அளவை விட இரண்டு மடங்கு அதிகம். இந்தியா தற்போது அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் 185 ஜிகா வாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலமாக மின் பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து மின்மிகை நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 1.97 லட்சம் சுற்று கி.மீ. தூரத்துக்கு மின்வடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒரே மின்பகிா்வு அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக மின் பகிா்மானக் கழகங்கள் மலிவுவிலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய முடியும். அதனால், வாடிக்கையாளா்களுக்கான மின் கட்டணமும் குறைவாக இருக்கும்.
மின் பகிா்மானக் கழகங்களின் ஒட்டுமொத்த கடன் ரூ.1,39,747 கோடியாக இருந்தது. கடந்த ஜூன் 3-ஆம் தேதி நிலவரப்படி அந்தக் கடனில் ரூ.64,196 கோடியை 13 மாநில மின் பகிா்மானக் கழகங்கள் செலுத்தியுள்ளன. நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வது தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 76.37 ஜிகா வாட்டாக இருந்தது. அது தற்போது 173.61 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கடந்த 9 ஆண்டுகளில் சுமாா் 7,800 கோடி அமெரிக்க டாலா் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 1,030 கோடி டாலரானது அந்நிய நேரடி முதலீடாகும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...