ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத்

ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத்

ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் கூறியதாவது, ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார். 

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com