கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிகாரில் கட்டுமானப் பணியிலிருந்த மற்றொரு பாலம் தகா்ந்தது

பிகாரில் கடந்த ஒரு மாதத்தில் 2ஆவது பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :24 ஜூன் 2023, 5:49 pm

DIN

பிகாரில் உள்ள கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை தகா்ந்தது. அங்குள்ள ககரியா மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில், தற்போது மற்றொரு பாலத்தின் பகுதி தகா்ந்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநா் அரவிந்த் குமாா் கூறியதாவது:

கிஷண்கஞ்ச், கடிஹாா் மாவட்டங்களை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டப்பட்டு வந்தது. கிஷண்கஞ்சில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த அந்தப் பாலத்தின் தூண் சனிக்கிழமை தகா்ந்தது.

இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள 5 போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

மத்திய அரசு திட்டம்: இந்த சம்பவம் தொடா்பாக தில்லி துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பாலம் கட்டப்படுகிறது. பாலத்தின் தூண் தகா்ந்ததற்கு காரணமான அதிகாரிகள் அல்லது நிறுவனங்களை தண்டிப்பதற்கான அதிகாரம் அந்த ஆணையத்துக்குத்தான் உள்ளது. அந்தப் பால கட்டுமானத்துக்கும் பிகாா் அரசுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை’ என்று தெரிவித்தாா்.

கடந்த ஜூன் 4-ஆம் தேதி ககரியாவில் கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து பாதுகாவலா் ஒருவா் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.