மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான சரக்கு ரயில்கள்
விபத்துக்குள்ளான சரக்கு ரயில்கள்


மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது. அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற இந்த ரயில் விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், 12 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டன. 

ஒடிசாவில் சமீபத்தில் 2 பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் இரண்டு ரயில்கள் மோதி விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com