சர்வாதிகாரத்தின் கீழ் மகாராஷ்டிரம்: சிவசேனை விமர்சனம்!

மகாராஷ்டிரத்தில் தற்போது சர்வாதிகாரம் நடைபெற்று வருவதாக சிவசேனை கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். 
ஆதித்ய தாக்கரே (கோப்புப் படம்)
ஆதித்ய தாக்கரே (கோப்புப் படம்)

மகாராஷ்டிரத்தில் தற்போது சர்வாதிகாரம் நடைபெற்று வருவதாக சிவசேனை கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரத்தில் சர்வாதிகாரப்போக்கு உள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைதூக்கியுள்ளது. எங்களின் (சிவசேனை) ஆட்சி நடைபெற்றபோது பணிகளும் திட்டங்களும் முழுவதும் மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்டன. 

ஆனால், தற்போதைய ஆட்சியில் நகராட்சி ஆணையர் 2 நாள்களாக நகரத்திலேயே இல்லை. பருவமழைக் காலத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்து சரிசெய்வார். 

ஆனால், இப்போது மழையால் பல இடங்கள் பாதிக்கப்பட்டும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்னும் பார்வையிடவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் எந்தவித நிவாரணங்களையும் வழங்கவில்லை. மக்களுக்கான பிரச்னைகளை சரிசெய்யவில்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com