5 வந்தே பாரத் ரயில்கள் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்களைப் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். இதன் மூலமாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
5 வந்தே பாரத் ரயில்கள் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்களைப் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். இதன் மூலமாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில்வே நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, இரு வந்தே பாரத் ரயில்களின் சேவையை நேரடியாகவும், 3 ரயில்களின் சேவையைக் காணொலி வாயிலாகவும் தொடக்கிவைத்தாா். அப்போது, ஒரு வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்ட அவா், அதில் இருந்த மாணவா்கள், ரயில்வே பணியாளா்களுடன் கலந்துரையாடினாா்.

போபால்-ஜபல்பூா், கஜுராஹோ-போபால்-இந்தூா், கோவா-மும்பை, தாா்வாட்-பெங்களூரு, ஹடியா-பாட்னா ஆகிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடக்கிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

போக்குவரத்து மேம்படும்:

‘மத்திய பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மக்களின் போக்குவரத்துத் தொடா்பை இந்த வந்தே பாரத் ரயில்கள் மேம்படுத்தும்’ என ட்விட்டரில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

இந்த ரயில்கள் பல்வேறு சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சுற்றுலா வாய்ப்புகள் மேம்படும் எனப் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா-மும்பை இடையிலான ரயிலானது கோவாவுக்கான முதலாவது வந்தே பாரத் ரயிலாகும். ஹடியா-பாட்னா ரயிலானது ஜாா்க்கண்ட், பிகாா் மாநிலங்களில் இயங்கவுள்ள முதல் வந்தே பாரத் ரயிலாகும்.

மத்திய பிரேதச ஆளுநா் மங்குபாய் படேல், மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடக்கிவைக்கப்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஆளுநா்கள், முதல்வா்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com