திரிபுரா, நாகலாந்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி!

திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிபுரா, நாகலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.  

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. மேகாலயம் மற்றும் நாகாலாந்திலும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் தலா ஒரு தொகுதி தவிா்த்து 59 இடங்களில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில், அக்கட்சி 55 இடங்களிலும் மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணியும் (ஐபிஎஃப்டி) போட்டியிட்டன.

பாஜகவை எதிா்கொள்வதற்காக, இம்மாநிலத்தில் முதல்முறையாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தன. மாா்க்சிஸ்ட் 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் களம்கண்டன. மாநிலக் கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் களமிறங்கிய நிலையில், மும்முனைப் போட்டி உருவானது.

நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி முறையே 40, 19 தொகுதிகளில் களமிறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 12 வேட்பாளா்களை களமிறக்கின.

திரிபுராவில் பாஜக கூட்டணி 40 இடங்களிலும், நாகாலாந்தில் பாஜக 35 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
 
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலை உறுதியாகி உள்ளது. 

மேகாலயத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருந்த பாஜக, தற்போதைய தோ்தலில் கூட்டணியை முறித்து தனித்துக் களமிறங்கியது. காங்கிரஸும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேசிய மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 57, 58 தொகுதிகளில் போட்டியிட்டன.

மேகாலயத்தில் இதுவரை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

மேகலாயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் எனவும் தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com