நாட்டில் 97 நாட்களுக்குப் பிறகு கரோனா தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டியது!

நாட்டில் 97 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 2,686 ஆக அதிகரித்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுதில்லி: நாட்டில் 97 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 2,686 ஆக அதிகரித்துள்ளன.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 28 ஆம் தேதி பாதிப்பு 169 ஆக இருந்த தொற்று பாதிப்பு மறுநாள் 240 ஆக அதிகரித்தது, 2 ஆம் தேதி 268 ஆகவும், வெள்ளிக்கிழமை 283-ஆக அதிகரித்த நிலையில், நான்காவது 4 ஆவது நாளாக சனிக்கிழமை தொற்று பாதிப்பு 334 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தொற்று பாதிப்பு 343 ஆக இருந்தது. அதன்பிறகு சுமார் 97 நாள்கள் கடந்த நிலையில் சனிக்கிழமை(மார்ச் 4) மீண்டும் 334 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 74 பேர், மகாராஷ்டிரத்தில் 66 பேர், கேரளத்தில் 58 பேர், தெலங்கானாவில் 26 பேர், தமிழ்நாட்டில் 24 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 170 பேர் குணமடைந்துள்ளனர். குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,686 ஆக உள்ளது. இது வெள்ளிக்கிழமையை விட 161 அதிகம் ஆகும்.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். அவர்களில் மகாராஷ்டிராவில் 2 பேர்,  கேரளத்தில் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர், இறந்தோரின் எண்ணிக்கை 5,30,775 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமா உள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 63 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com