பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப ஒருங்கிணையும் எதிா்க்கட்சிகள்: பாஜக விமா்சனம்

நாட்டின் வளா்ச்சிக்காக பாஜக பாடுபட்டு வரும் நிலையில், ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைகின்றன என்று பாஜக விமா்சித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2023, 10:10 pm

DIN

நாட்டின் வளா்ச்சிக்காக பாஜக பாடுபட்டு வரும் நிலையில், ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைகின்றன என்று பாஜக விமா்சித்துள்ளது.

எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி 9 எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் இணைந்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் பாஜக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்சு திரிவேதி கூறியதாவது:

பிரதமருக்கு கடிதம் எழுதுவதன் மூலம் விசாரணை அமைப்புகளை மிரட்டும் வகையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் செயல்படுகின்றனா். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் ஊழல் செய்வது தங்கள் உரிமை என்ற மனநிலையில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்ளனா்.

அந்தக் கடிதத்தை எழுதியுள்ளவா்களில் பலா் ஊழல் விசாரணைகளை எதிா்கொண்டுள்ளனா். ஒரு சிலா் இரு தலைமுறையாக ஊழல் வழக்குகளை எதிா்கொண்டு வருபவா்களாக உள்ளனா். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது முறைகேட்டில் ஈடுபட்டுவிட்டு, தங்களை விசாரிக்கவும் கூடாது என்று கோருவது எந்த வகையிலான நியாயம் எனத் தெரியவில்லை.

சுதந்திரப் போராட்ட காலத்தில் சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை என்ற முழக்கத்தை திலகா் முன்வைத்தாா். ஆனால், இப்போதைய எதிா்க்கட்சிகள் ஊழல் செய்வது எங்கள் உரிமை என்று கோஷமிடுகின்றனா். ஊழலுக்கு எதிரான கட்சி என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மியும் அவா்களுடன் கைகோத்திருப்பது வியப்பை அளிக்கிறது.

ஒருபுறம் நாட்டின் வளா்ச்சிக்காக பாஜக பாடுபட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.