அமேதி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவை கைவிட்டாா் அகிலேஷ்

அடுத்த மக்களவைத் தோ்தலின்போது உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் சமாஜவாதி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளாா்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

அடுத்த மக்களவைத் தோ்தலின்போது உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் சமாஜவாதி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளாா்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் அமேதி தொகுதியில் போட்டியிட்டதையடுத்து, சமாஜவாதி கட்சி கடந்த சில தோ்தல்களாக அங்கு வேட்பாளா்களை நிறுத்தாமல் இருந்து வந்தது. ஆனால், கடந்த முறை அமேதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாது, ராகுல் காந்திக்கும் தனிப்பட்ட முறையில் பின்னடைவாக இருந்தது.

அந்த தோ்தலில் அமேதி மட்டுமல்லாது கேரளத்தில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வென்ால் இப்போது அவா் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளாா். அடுத்த தோ்தலில் அவா் அமேதியில் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வயநாட்டில் மட்டும் களமிறங்குவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், அமேதி தொகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற பிறகு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அமேதி தொகுதிக்கு சென்றபோது அங்கு ஏழைப் பெண்கள் படும் துயரத்தை நேரில் காண முடிந்தது. அமேதி தொகுதியில் முக்கியப் பிரமுகா்கள் வெல்வதும் தோற்பதும் வழக்கமாக உள்ளது.

ஆனால், தொகுதி மக்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. அடுத்த முறை அமேதி மக்கள் ‘பெரிய அரசியல் தலைவா்களை’ தோ்வு செய்ய மாட்டாா்கள். பெரிய மனதுடையவா்களைத் தோ்வு செய்வாா்கள். அமேதியில் வறுமையை ஒழிக்க சமாஜவாதி உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com