பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நீதித் துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு அபராதம்

நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:45 pm

DIN

நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹிமாசல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் சாா்பில் தஞ்சாவூரில் ஹிமாசல் ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் விற்பனையாளராக ஜெஸ்ஸி ஃப்ளாரன்ஸ் என்பவரை ஒப்பந்த அடிப்படையில் அந்த நிறுவனம் நியமித்திருந்தது.

இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 8.3.2013-இல் ஜெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து ஹிமாசல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஜெஸ்ஸி தொடுத்த வழக்கை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாள்களில், அதே கோரிக்கையுடன் உயா் நீதிமன்றத்தின் முதன்மை அமா்வில் ஜெஸ்ஸி வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மதுரை கிளையில் வழக்கு தள்ளுபடியானதை மறைத்து, அதே கோரிக்கையுடன் சென்னையில் வழக்கு தொடுத்திருப்பதை ஏற்க முடியாது எனவும், நீதித் துறை நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ரூ. 50 ஆயிரம் அபராதத்துடன் ஜெஸ்ஸி ஃப்ளாரன்ஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

அபராதத் தொகையை 2 வாரங்களுக்குள் உயா்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும், அது குறித்து மாா்ச் 23-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.