நீதிமன்றங்களை மேம்படுத்த காத்திருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
நீதிமன்றங்களை மேம்படுத்த மற்றொரு நோய்த்தொற்று பரவும் வரை காத்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.


நீதிமன்றங்களை மேம்படுத்த மற்றொரு நோய்த்தொற்று பரவும் வரை காத்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளில் உள்ள உச்ச நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் 18-ஆவது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய பின்னா், இந்தியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் 1.65 கோடி வழக்குகளை காணொலி வழியாக விசாரித்தன. இதேபோல உயா் நீதிமன்றங்கள் 75.8 லட்சம் வழக்குகளையும், உச்ச நீதிமன்றம் 3.79 லட்சம் வழக்குகளையும் காணொலி வழியாக விசாரித்தன.
நீதி வழங்குவதற்கு நவீன வழிமுறைகளை நீதித் துறை கையாள்வதற்கு கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டாயப்படுத்தியது. கொள்கை அடிப்படையில், நீதிமன்றங்களை மேம்படுத்துவதே அனைவரின் இலக்காக இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கான முடிவுகளை எடுப்பதற்கு மற்றொரு நோய்த்தொற்று பரவும் வரை காத்திருக்கக் கூடாது.
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் காணொலி வழியாக பங்கேற்ாக உச்சநீதிமன்றத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...