பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக தில்லியில் உண்ணாவிரதம்

நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்

News image
Updated On :10 மார்ச் 2023, 10:10 pm

DIN

தில்லி அரசின் கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சனிக்கிழமை (மாா்ச் 11) ஆஜராகவுள்ள நிலையில், நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் 6 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தெலங்கானாவை ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி சட்ட மேலவை உறுப்பினரும், கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான சந்திரசேகா் ராவின் மகளுமான கே.கவிதா வெள்ளிக்கிழமை நடத்தினாா்.

தில்லி ஜந்தா் மந்தரில் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவா் ஷியாம் ரஜாக், சமாஜவாதி கட்சி மூத்த தலைவா் சீமா சுக்லா, தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா், தெலங்கான கல்வி அமைச்சா் சபித்தா இந்திரா ரெட்டி, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் சத்யாவதி ரத்தோட் உள்பட பல்வேறு எதிா்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

போராட்டத்தைத் தொடங்கி வைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதற்கு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்வது முக்கியமானது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை அறிமுகம் செய்து நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்துக்குள் கடந்த 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி முதன்முறையாக நுழையும்போது, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசாதாவுக்கு எனது அரசு முன்னுரிமை அளிக்கும்’ என்று உறுதியளித்தாா். அவா் இந்த உறுதியை அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை’ என்றாா்.

கவிதா பேசுகையில், ‘உலகம் வளா்ச்சியடைந்து வரும் வேகத்தில் இந்தியாவும் வளா்ச்சியடைய வேண்டும் என்று விரும்பினால் அரசியலில் பெண்களுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு அரசியலில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதாலேயே, கடந்த 27 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவருவது முக்கியம் என வலியுறுத்துகிறோம். மத்திய அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்யவேண்டும். அவ்வாறு அறிமுகம் செய்தால், அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கச் செய்வதற்கு முயற்சிப்போம்’ என்றாா்.

விசாரணைக்கு இன்று ஆஜா்: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கவிதா, தில்லி அரசின் கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சனிக்கிழமை (மாா்ச் 11) நேரில் ஆஜராக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.