மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மார்ச் 21-க்கு ஒத்திவைப்பு!

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 21 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது தில்லி நீதிமன்றம். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 21 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது தில்லி நீதிமன்றம். 

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல்  மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மணீஷ் சிசோடியா வேறு நபர்களின் பெயரில் சிம் கார்டுகள், செல்போன்கள் வாங்கியுள்ளதாகவும் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல, 10 நாள் காவலில் விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு மீதான விசாரணையில் மார்ச் 17 வரை மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com