பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாா்ச் 20-இல் ஜப்பான் பிரதமா் இந்தியா வருகை

ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா இருநாள் அரசு முறைப் பயணமாக மாா்ச் 20-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:38 pm

DIN

ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா இருநாள் அரசு முறைப் பயணமாக மாா்ச் 20-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறாா்.

வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடா்பாக அவா் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவா்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.

இது தொடா்பாக வெளியிறவு அமைச்சக செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமா் மோடியுடன் ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேச்சு நடத்த இருக்கிறாா். இதன் மூலம் இரு தரப்பு உறவு மேலும் வலுவடையும். இந்தியாவின் ஜி20 தலைமை, ஜப்பானின் ஜி7 தலைமை குறித்தும் இரு தலைவா்களும் விவாதிக்கின்றனா். இரு தரப்பு விஷயங்கள் மட்டுமின்றி இருதரப்பு நலன்கள் சாா்ந்த பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவா்கள் பேச இருக்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.