பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மும்பையில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 7 பேர் கொண்ட குழு: மும்பை மாநகராட்சி அதிரடி

மும்பையின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து பெருநகர மும்பை மாநகராட்சி ஆணையர் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

News image
Updated On :12 மார்ச் 2023, 2:28 pm

DIN

மும்பை (மகாராஷ்டிரம்): பெருநகர மும்பையின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆணையர் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்த குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பெருநகர மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மார்ச் மாதம் இறுதியில் மும்பையில் நடைபெறவிருக்கும் ஜி20 கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து பெருநகர மும்பை மாநகராட்சி ஆணையரும் நிர்வாகியுமான இக்பால் சிங் சாஹல் ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். “காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் மும்பையை அழகுபடுத்தும் திட்டத்தில் பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார்." 

மேலும், "பல்வேறு வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகளில் இருந்து எழும் தூசியுடன் காற்றின் வேக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மும்பை நகரம் உள்பட மும்பை பிராந்தியத்தில் காற்றின் தரம் தற்போது மோசமாக உள்ளது. காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமான தூசியைக் கட்டுப்படுத்த கூடுதல் நகராட்சி ஆணையர் (மேற்கு புறநகர்) சஞ்சீவ் குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏழு நாள்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். 

அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2023 முதல், பெருநகர மும்பையின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். மீறுபவர்கள் மீது கட்டுமானப் பணிகளை நிறுத்துவது உள்ளிட்ட பிற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேர் கொண்ட குழுவில் கூடுதல் நகராட்சி ஆணையர் (மேற்கு புறநகர்) டாக்டர் சஞ்சீவ் குமார் (தலைவர்), துணை நகராட்சி ஆணையர் (சுற்றுச்சூழல்), துணை நகராட்சி ஆணையர் (உள்கட்டமைப்பு), துணை நகராட்சி ஆணையர் (திடக்கழிவு மேலாண்மை), தலைமை பொறியாளர் (மேம்பாடு திட்டமிடல்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிர்வாகப் பொறியாளர் சதீஷ் கீதே, நகராட்சி அணையர் அலுவலகத்தின் பிரதிநிதியாகவும், மகாராஷ்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.

இந்த அவசர ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து நகராட்சியின் கூடுதல் ஆணையர்கள், நகராட்சியின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் 2023 இறுதியில் மும்பையில் நடைபெற உள்ள ஜி20 கூட்டங்களை அடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.