இந்தியாவில் 113 நாள்களுக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 524 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,618 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம்!
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது: கரோனா இறப்பு எண்ணிக்கை 5,30,781 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,90,492 பேர்) உள்ளது. தேசிய அளவில் கரோனாவிலிருந்து மீண்டு குணமடைபவர்களின் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் 1.19 ஆக உள்ளது. இதுவரை 220.64 கோடி கரோனா தடுப்பூசிகள் தடுப்பூசி முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.