தாயைக் கொன்று உடலை வெட்டி அறையில் வைத்திருந்த மகள் கைது
தனது தாயைக் கொன்று, அவரது உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி, கடந்த ஒன்றரை மாதங்களாக ஒரே அறை கொண்ட வீட்டில் வைத்திருந்த 24 வயது மகள் கது செய்யப்பட்டுள்ளார்.


மும்பை: தனது தாயைக் கொன்று, அவரது உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி, கடந்த ஒன்றரை மாதங்களாக ஒரே அறை கொண்ட வீட்டில் வைத்திருந்த 24 வயது மகள் கது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து உடல் பாகங்களை தனித்தனியாக பிளாஸ்டிக் பைகளில் வைத்திருந்தது காவல்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க.. காய்ச்சல் நல்லதாகவும் இருக்கலாம்: புதிய ஆராய்ச்சியில் தகவல்
மார்பிள்களை வெட்டும் கட்டரை வாங்கி வந்த மகள், தாயின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி ஒரு சில பாகங்களை அலமாரியிலும், கால் உள்ளிட்ட பாகங்களை தண்ணீர் டிரம்மிலும் மறைத்து வைத்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்ததில், இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கடந்த புதன்கிழமை, கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது சகோதரி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் மகளிடம் கேட்டால் உண்மையைச் சொல்ல மறுப்பதாகவும், எங்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மகளிடம் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறையினர், வீட்டுக்குள் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து சோதனை செய்ததில், தாயின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
உடலைக் கைப்பற்றி, மகளை கைது செய்த காவல்துறையினர், மகளுக்கு மனநல சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...