நாட்டில் எந்த உயர்நீதிமன்றங்களிலும் பெண் தலைமை நீதிபதிகளே இல்லையா?

நாட்டில் உள்ள எந்த உயர்நீதிமன்றங்களிலும் பெண் தலைமை நீதிபதிகளே இல்லை என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
நாட்டில் எந்த உயர்நீதிமன்றங்களிலும் பெண் தலைமை நீதிபதிகளே இல்லையா?


புதுதில்லி: நாட்டில் உள்ள எந்த உயர்நீதிமன்றங்களிலும் பெண் தலைமை நீதிபதிகளே இல்லை என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தாா். அதையடுத்து குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு பிரதமா் நரேந்திர மோடி இரு அவைகளிலும் பதிலளித்தாா்.

பட்ஜெட் மீதான பொது விவாதமும் முதல்கட்ட கூட்டத்தொடரில் நடைபெற்றது. அந்த விவாதங்களுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தாா். அதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் 13-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் விவரங்களை மத்திய அமைச்சகங்களும் துறைகளும் ஆய்வு செய்வதற்காக சுமாா் ஒரு மாத இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கட்டம் திங்கள்கிழமை(மார்ச் 13) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி கூட்டத்தொடா் நிறைவடைகிறது.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அவையின் வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டு குறித்தும், அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்டவை முதலீடுகளை மேற்கொண்டது தொடா்பாகவும் விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக முடங்கின.

இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்ஹா வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் எத்தனை பெண் நீதிபதிகள் பணிபுரிகின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமான அளித்த பதிலில், உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துணை நீதிபதிகளில் 30 சதவீதம் பெண்கள் மட்டுமே உள்ளனர்.

"கடந்தத 70 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்துள்ளது, ஆனால், உயர்நீதிமன்றங்களில் பன்முகத்தன்மையை வழங்குவதற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது" என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரிஜிஜு கூறியிருந்தார்.

கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. 

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தற்போது தலைமை நீதிபதி உள்பட 27 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

தரவுகளின்படி, உச்ச நீதிமன்றம் இன்றுவரை 488 வழக்குரைஞர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது, அவர்களில் 19 பேர் மட்டுமே பெண்கள்.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் தற்போதுள்ள 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர், அவர்களில் 106 பேர் பெண்கள். 

உயர்நீதிமன்றங்களின் மொத்த பலத்தில் 9.5 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர்.

1950 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை 4 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 15 பெண் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான 13 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர், மேகாலயா, பாட்னா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிகள் இல்லை.

கௌஹாத்தி, ஹிமாச்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் சிக்கிம்  ஆகிய உயர்நீதிமன்றங்களில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டும் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் ஒன்றில் கூட பெண் தலைமை நீதிபதிகள் இல்லை என்று கிரிண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.

நாட்டிலிருந்து 15 லட்சம் வழக்குரைஞர்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பெண்கள், இது பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குரைஞர்களில் சுமார் 15.31 சதவீதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com