அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை வரவேற்கிறது மத்திய அரசு

2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

News image
Updated On :2 மே 2023, 11:13 pm

 நமது நிருபர்

2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
 இந்தப் பரிந்துரைகளுக்கான இறுதிநாள் வரும் செப்டம்பர் 15 - ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயர்ந்த பத்ம விருதுகள் அளிக்கப்படுகின்றன.
 வெளிப்படைத் தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக ஒரே தளத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகள் வழங்கும் 14 வகையான அனைத்து தேசிய விருதுகளையும் ஒருங்கிணைத்து கொண்டு வரும் வகையில், பொதுவாக தேசிய விருது
 இணையப்பக்கம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது.
 பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2023 செப்டம்பர் 15-ஆம் தேதியாகும். இதற்கான நடவடிக்கை திங்கள்கிழமை (மே 1) தொடங்கியது. பத்ம விருதுகள் என்பது பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவையாகும்.
 நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான இது 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த மற்றும் அசாதாரண சாதனைகள், சேவைகளுக்காக வழங்கப்படுகிறது.
 நிகழ் 2023 -ஆம் ஆண்டில் 6 பத்ம விபூஷண், 9 பத்ம பூஷண் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களில் 19 பேர் பெண்கள். இதில் 7 பேர் மரணத்துக்குப் பின் பெற்றவர்கள் ஆவர். இதில் பிரபல பாடகி வாணிஜெயராம் கலைக்காக பத்ம பூஷண் விருதை பெற்றிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.