சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பஞ்சாபில் அலுவலக நேரம் மாற்றம்: காலை 7.30 மணிக்கு திறப்பு!

பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது.

News image
Updated On :2 மே 2023, 10:05 am

DIN

பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது.

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நோக்கில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் நேரத்தை மாநில அரசு மாற்றி அமைத்துள்ளது. காலை 9 முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டு வந்த அலுவலகங்கள், இன்றுமுதல் ஜூலை 15 வரை காலை 7.30 முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் நாளான இன்று காலை 7.30 மணிக்கு முதல்வர் பகவந்த் மான் அலுவலகத்திற்கு வருகை தந்தார். மேலும், பல்வேறு அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் காலை 7.30 மணிக்கு முன்னதாகவே தங்களின் அலுவலகத்திற்கு வந்தனர்.

இந்த நேர மாற்றத்தின் மூலம் சுமார் 350 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும்,  வெயில் காலத்தில் வெயிலுக்கு முன்னதாகவே மக்கள் தங்களின் பணிகளை அலுவலகங்களில் முடித்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.