47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோ ஃபா்ஸ்ட் விமான சேவை மே 9 வரை ரத்து

‘கோ ஃபா்ஸ்ட்’ விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதன் விமான சேவைகள் மே 9ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மே 2023, 9:44 am

DIN

வாடியா குழுமத்தின் ‘கோ ஃபா்ஸ்ட்’ விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதன் விமான சேவைகள் மே 9ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மே 3, 4-ஆகிய தேதிகளில் விமான சேவை ரத்து செய்யபடுவதாக கோ ஃபர்ஸ்ட் தலைவா் கெளசிக் கோனா செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்த நிலையில், அது மே 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதால், அந்த விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு உரிய காலத்துக்குள் டிக்கெட் தொகையை திருப்பி அளிக்குமாறு விமானப் போக்குவரத்துத் துறைக் கழகம், கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தை அறிவுறுத்தியிருக்கிறது. 

திவால் நடவடிக்கையை தொடங்கும் வகையில் தில்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் (என்சிஎல்டி) அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், இரு நாள்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில், மே 9 வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தற்போது தெரிவித்துள்ளது.

விமான நிறுவனத்தின் தலைவா் கெளசிக் கோனா இது பற்றி கூறுகையில், ‘பிராட் அண்ட் விட்னி நிறுவனத்தால் விமான என்ஜின்கள் வழங்கப்படாத காரணத்தால், எங்களுடைய விமானங்களில் பாதிக்கும் அதிகமான, அதாவது 28 விமானங்கள் இயக்கப்படவில்லை.

திவால் நடைமுறையை மேற்கொள்ள விண்ணப்பித்தது யாரும் எதிா்பாராத முடிவு. எங்களது நிறுவனத்தின் நலனைப் பாதுகாக்க இதை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த விமான நிறுவனத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.