காங்கிரஸ் தடம் தெரியாமல் போய்விடும்: ஃபட்னவீஸ் கூறும் காரணம்?

பஜ்ரங்தளம் அமைப்பை தடை செய்தால் காங்கிரஸ் கட்சி கடும் விளைவுகளை சந்திக்கும் என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். 
தேவேந்திர ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்

பஜ்ரங்தளம் அமைப்பை தடை செய்தால் காங்கிரஸ் கட்சி கடும் விளைவுகளை சந்திக்கும் என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெலகாவியில் பேசிய தேவேந்திர ஃபட்னவீஸ், கர்நாடக மக்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உள்ளனர். பஜ்ரங்தள அமைப்பை தடை செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாட்டில் யார் இதனை ஏற்றுக்கொள்வார்கள். நாட்டை மேம்படுத்த நினைப்பவர்களை எப்படி தடை செய்ய முடியும்.

நாட்டின் நலனுக்கு எதிரான எந்தவொரு செயலிலும் பஜ்ரங்தளம் அமைப்பு ஈடுபடவில்லை. பஜ்ரங்தளம் அமைப்பை தடை செய்தால், ஹனுமனின் ஆசிபெற்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் இடத்தைக் காட்டுவார்கள். காங்கிரஸ் தடம் தெரியாமல் போய்விடும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com