அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கலால் கொள்கை விவகாரம்: சிசோடியாவிற்கு மே 23 வரை காவல் நீடிப்பு

தில்லி அரசின் கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வருகின்ற மே 23 -ஆம் தேதி வரை ந

News image
Updated On :8 மே 2023, 7:29 pm

 நமது நிருபர்

தில்லி அரசின் கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வருகின்ற மே 23 -ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நீதிமன்றக் காவல் முடிந்து திங்கள்கிழமை தில்லி நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா ஆஜா்படுத்தப்பப்பட்டாா். அப்போது சிறப்பு நீதிபதி எம்.கே நக்பல் இந்த உத்தரவை பிறப்பித்தாா். இந்த வழக்கு தொடா்பாக அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.கே. மட்டா, குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக சமா்ப்பித்த துணை குற்றப் பத்திரிகையையும், அதன் மீதான விசாரணையை மே 10 -ஆம் தேதி நடத்த பரிசீலிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது.

மேலும்,பொருளாதாரக் குற்றங்கள் தொடா்பான வழக்கு பொது மக்கள் மற்றும் சமூகத்தின் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ,விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மனீஷ் சிசாடியா குற்றத்தில் ஈடுபட்டிருப்பதைக் காட்டுகிறது என முன்னா் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

முன்னதாக, நீதிமன்ற வளாகத்திற்கு வந்த மனீஷ் சிசோடியாவிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பிய போது, ‘உண்மையின் குரல் தொடா்ந்து ஓங்கி ஒலிக்கும். பாஜகவினா் எவ்வளவு முயற்சி செய்தாலும், தில்லியின் வளா்ச்சிப் பணிகள் ஒருபோதும் நிற்காது’ என்றாா்.

கலால் ஊழல் வழக்கில் மனீஷ் சிசோடியாவை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி கைது செய்தது. தில்லி கலால் கொள்கை 2021-22-ஐ உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.