அனுமதியின்றி பல்கலைக்குள் நுழையக்கூடாது: ராகுலுக்கு தில்லி பல்கலை நோட்டீஸ்!
தில்லி பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தில்லி பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தில்லி பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லி பல்கலைக்கழக பதிவாளர் விகாஸ் குப்தா கூறுகையில்,
கடந்த வாரம் ராகுல் காந்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென தில்லி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து அங்குள்ள ஆண்கள் விடுதிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்துள்ளார்.
அவர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் போது மாணவர்கள் பலர் மதிய உணவு அருந்தி வந்தனர். அப்போது மாணவர்களுடன் உரையாடிய ராகுல் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
முறையில்ல இந்த வருகை மாணவர்களின் பாதுகாப்பைக் குறைப்பதாக உள்ளது. இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறக்கூடாது என்றும் மாணவர்களின் பாதுகாப்பை பாதிக்கக்கூடாது என்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.