காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில்  3.5 ஆகப் பதிவு

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. 

News image
Updated On :11 மே 2023, 3:06 am


உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. 

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்க பதிவில், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் வியாழக்கிழமை அதிகாலை 5.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கி.மி அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம், பித்தோராகருக்கு வட-வடமேற்கில் 23 கிமீ தொலைவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.