விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தி கேரளா ஸ்டோரி: தமிழ்நாடு, மேற்குவங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

'தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதித்த தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

News image
Updated On :12 மே 2023, 9:57 am

DIN

'தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதித்த தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி பல கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்திரித்துள்ளதாக இப்படத்தின் மீது  எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் சமூகப் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், 'நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்க அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம்' என்று நீதிபதிகள் கூறிய நிலையில், தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே  'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மே 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.