
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் கெர்சகேரா தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை உ.பி.யின் பலியின் ஜெர்ஹ் கிராமத்தில் தில்லி-லக்னௌ தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள அசோகா ஃபோம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்தனர், 6 பேர் காயம் அடைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது கட்டடத்திற்குள் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உ.பி போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.