முதல்வர் பசவராஜ் பொம்மை வந்தபோது, பாஜக அலுவலகத்தில் புகுந்த பாம்பு
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சனிக்கிழமை காலை ஷிக்கோனில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்தபோது அங்கு மிகப்பெரிய நாகப்பாம்பு நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.


ஹாவேரி: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சனிக்கிழமை காலை ஷிக்கோனில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்தபோது அங்கு மிகப்பெரிய நாகப்பாம்பு நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், பாஜக அலுவலகத்துக்கு வந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, அங்கிருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த அலுவலகத்துக்குள் ஒரு நாகப்பாம்பு நுழைந்ததைப் பார்த்தவர்கள் உடனடியாக மீட்புப் படையினரை அழைத்தனவர். அவர்கள் விரைந்து வந்து பாம்பைப் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட்டனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை இருந்த போது, அலுவலகத்துக்குள் பாம்பு நுழைந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...